திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்

திண்டுக்கல், செப். 1: தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் அறிவுறுத்தலின்படி இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயர்களை இந்தி, சமஸ்கிருதத்தில் மாற்றம் செய்வதை கண்டித்து கஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதன்படி திண்டுக்கல் வழக்கறிஞர் வெல்பேர் அசோசியேஷன் சார்பாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

தலைவர் ரமேஷ் செயலாளர் தனசேகர் தலைமை வகித்தார். துணை தலைவர் விவேக், துணை செயலாளர் தர்மர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் செயற்குழு உறுப்பினர்கள் மலைராஜன், ஜெய்சங்கர், புவனேஸ்வரி, கவுசல்யா, வெற்றிவேல், நவக்குமார், ராஜமாணிக்கம் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

The post திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Related Stories: