×

திண்டுக்கல்லில் தமிழக அரசின்சாதனை விளக்க கூட்டம்

திண்டுக்கல், மே 10: திண்டுக்கல் மாநகர வடக்கு பகுதி திமுக சார்பில் தமிழக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொது கூட்டம் நடைபெற்றது. பகுதி செயலாளர் ஜானகிராமன் தலைமை வகித்தார். மாநகர செயலாளரும், துணை மேயருமான ராஜப்பா, மேயர் இளமதி ஜோதி பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் கரூர் மதிவாணன் கலந்து கொண்டு நாடு போற்றும் நான்காண்டு- தொடரட்டும் இது பல்லாண்டு என்ற தலைப்பில் திமுக அரசின் சாதனைகளை விளக்கி பேசினார்.

இதில் மாநகர அவை தலைவர் முகமது இப்ராகிம், துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் மீடியா சரவணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அக்பர், பகுதி கழக செயலாளர்கள் பஜ்லுல் ஹக், ராஜேந்திரகுமார், சந்திரசேகர், பேச்சாளர் தீக்கனல் கருணாநிதி, இலக்கிய அணி முருகானந்தம், அரசு வழக்கறிஞர் சூசை ராபர்ட், வடக்கு பகுதி மண்டல தலைவர் ஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் இந்திராணி, மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். வார்டு செயலாளர் சக்திவேல் நன்றி கூறினார்.

The post திண்டுக்கல்லில் தமிழக அரசின்சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Dindigul ,DMK ,North ,section ,Section Secretary ,Janakiraman ,Deputy ,Mayor ,Rajappa ,Ilamathi Jyothi… ,Dinakaran ,
× RELATED கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டு கடந்தது:...