×

திண்டுக்கல்லில் அங்கக சான்றுக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

திண்டுக்கல், ஜன. 26: திண்டுக்கல்லில் தமிழ்நாடு அங்கக சான்றளிப்பு துறை மூலம் தேசிய அங்கக சான்றளிப்பு திட்டத்தின் கீழ் அங்கக சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட விவசாயிகளுக்கு சான்றளிப்பு தொடர்பான பயிற்சி முகாம் நடந்தது. திண்டுக்கல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பொ.போது, ஆத்தூர் விதை சான்று அலுவலர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

முகாமுக்கு தலைமை வகித்த விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சந்திரமாலா அங்கக சான்றளிப்பின் நோக்கம், முக்கியத்துவம் அங்கக சான்று பெறும் வழிமுறைகள், அங்ககச் சான்று நிலைகள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், பதிவேடுகளை பராமரித்தல், பதாகைகள் அமைத்தல், தவிர்க்க வேண்டிய இடுபொருட்கள் உள்ளிட்டவை குறித்து பேசினார். முகாமுக்கான ஏற்பாடுகளை விதை சான்று அலுவலர் சின்னண்ணன் செய்திருந்தார்.

The post திண்டுக்கல்லில் அங்கக சான்றுக்கு விண்ணப்பித்த விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் appeared first on Dinakaran.

Tags : Dindigul. ,Dindigul ,Madurai ,Theni ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் பூதிபுரம் ரேஷன் கடையில் கலெக்டர் ஆய்வு