×

தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டய கணக்கர் தேர்வுக்கு பயிற்சி

அரியலூர், நவ. 14: தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் இரத்தினசாமி வெளியிட்ட செய்தி குறிப்பு:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant- Intermediate) நிறுவன செயலாளர் – இடைநிலை (Company Secretary Intermediate) மற்றும் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை (Cost and Management Accountant Intermediate) ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது என அரியலூர் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) முன்னெடுப்பாக, சென்னையிலுள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணக்கர்களுக்கு பட்டய கணக்காளர் – இடைநிலை (Chartered Accountant- Intermediate) நிறுவன செயலளர் – இடைநிலை (Company Secretary Intermediate) மற்றும் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை (Cost and Management Accountant Intermediate) ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி பெற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணக்கர்கள் இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஒரு வருட பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

எனவே, இப்பயிற்சிக்கு விருப்பமுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறுமாறு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.

The post தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு பட்டய கணக்கர் தேர்வுக்கு பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Adi Dravidas ,TADCO ,Ariyalur ,Adi Dravidian ,Collector ,Rathanasamy ,Adi Dravida ,Dinakaran ,
× RELATED உசிலம்பட்டி அருகே...