×

உசிலம்பட்டி அருகே ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனை: ஆர்டிஓ தலைமையில் அளவீடு பணிகள்

 

உசிலம்பட்டி, டிச. 2: உசிலம்பட்டி அருகே, ஆதிதிராவிடர்களுக்கு காலனி வீடுகள் அமைப்பதற்கான மனைகளை அளவீடு செய்யும் பணிகள், ஆர்டிஓ தலைமையில் நடைபெற்றது. உசிலம்பட்டியை அடுத்த பாப்பாபட்டி ஊராட்சியில் உள்ள கரையாம்பட்டியில், ஆதி திராவிட சமூக மக்களுக்கு காலனி வீடுகள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இடத்தினை முறையாக அளவீடு செய்து பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் உசிலம்பட்டி ஆர்டிஓ சண்முகவடிவேல் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதன்படி நேற்று அப்பகுதியில் ஆர்டிஓ தலைமையில் தாசில்தார் பாலகிருஷ்ணன், மண்டல துணைத் தாசில்தார் வெங்கடேஷ், வருவாய் ஆய்வாளர் தனசேகரன், தலைமை சர்வேயர் ஜெயபாண்டி, சர்வேயர் நாகூர்மீரான் விஏஓ ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், அப்பகுதியில் நிலத்தினை அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர்.

இப்பகுதியில் ஏற்கனவே 57 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் 46 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான இடம் மற்றும் ரேசன்கடை, திருமண மண்டபம் அமைப்பதற்கான இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நிலத்தை அளவீடு செய்து உரிய பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

The post உசிலம்பட்டி அருகே ஆதிதிராவிடர்களுக்கு வீட்டு மனை: ஆர்டிஓ தலைமையில் அளவீடு பணிகள் appeared first on Dinakaran.

Tags : Adi Dravidas ,Usilambatti ,RTO ,Usilampatti ,Kariyampatti ,Papapatti ,Adi Dravida ,Dinakaran ,
× RELATED தாராபுரம் ஆர்டிஓ உத்தரவு மீறல்; தீவன...