தர்மபுரியில் இன்று ட் எதிர்ப்பு போராளிகளுக்கு திமுக சார்பில் வீரவணக்கம்: ங்கம் சுப்ரமணி அறிக்கை

தர்மபுரி, செப்.1: தர்மபுரி கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில், நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்க செலுத்தும் நிகழ்ச்சி இன்று(1ம் தேதி) நடக்கிறது. துகுறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ட் தேர்வு திணிப்பால் மரணத்தை தழுவிய தங்கை அனிதாவின் நினைவு நாளையொட்டி, நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தர்மபுரி அண்ணா சிலை முன்பு, இன்று(1ம் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவரணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாநில மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர- பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வ்வாறு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

The post தர்மபுரியில் இன்று ட் எதிர்ப்பு போராளிகளுக்கு திமுக சார்பில் வீரவணக்கம்: ங்கம் சுப்ரமணி அறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: