தர்மபுரி, ஏப்.16: சென்னையில் இருந்து சரக்கு ரயில் மூலம் 1,458 டன் யூரியா தர்மபுரி ரயில் நிலையத்திற்கு வந்திறங்கியது. இந்த உர மூட்டைகள் உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.சென்னை மணலியில் இருந்து 1,458 டன் யூரியா, சரக்கு ரயில் மூலம் தர்மபுரி ரயில்நிலையத்திற்கு நேற்று வந்தது. இதை ரயிலில் இருந்து இறக்கி, லாரிகள் மூலம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள உரக்கடைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
இப்பணியை வேளாண்மை தரக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் தாம்சன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, விற்பனை அலுவலர் மேகநாதன், மொத்த விற்பனையாளர் நாதன் ஆகியோர் உடனிருந்தனர். தர்மபுரி மாவட்ட உரக்கடைகளுக்கு 705.15 டன் யூரியாவும், கிருஷ்ணகிரி மாவட்ட உரக்கடைகளுக்கு 752.85 டன் யூரியாவும் பிரித்து அனுப்பப்பட்டது. விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி, அரசு நிர்ணயித்த விலையில் யூரியா பெற்று பயனடையுமாறு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் விஜயா தெரிவித்துள்ளார்.
The post தர்மபுரிக்கு 1,458 டன் யூரியா வரத்து appeared first on Dinakaran.