காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தில் 3 வாலிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் ராணுவம் விதிமுறைகளை மீறியுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூலை மாதம் 18-ம் தேதி தெற்கு காஷ்மீரில் 3 வாலிபர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் தீவிரவாதிகள் என கூறப்பட்டது. ஆனால், ‘கொல்லப்பட்ட மூவரும் தீவிரவாதிகள் அல்ல. ரஜோரி மாவட்டத்தில் உள்ள அசிம்புரா பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் காணாமல் போனது பற்றி அம்சிபுரா காவல் நிலையத்திலும் புகாரும் கொடுக்கப்பட்டிருக்கிறது,’ என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தீவிரவாதிகள் என நினைத்து 3 அப்பாவி வாலிபர்களை சுட்டுக் கொன்ற ராணுவம்
