சென்னை: இந்திய கனரக வாகன ஓட்டுநர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை: கனரக வாகன ஓட்டுநர்கள் 100% வாக்களிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு விடுமுறையோடு கூடிய சம்பளம் வேண்டும்.வாக்குப்பதிவிற்கு முதல் நாள் வாக்குப்பதிவு அன்று மற்றும் மறுநாள் என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை எடுக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே, இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு அன்றாவது ஊதியம் வழங்க ஆணையிட வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் வாக்கு ஒவ்வொன்றும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய வாக்குகள். எனவே இதை கருத்தில் கொண்டு இந்திய தேர்தல் ஆணையம் எங்கள் கோரிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டும்.
