திருத்துறைப்பூண்டி, செப். 4: திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வழங்கும் விழா நடைபெற்றது. கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துத் கழக மேலாண் இயக்குனர் மோகன் உத்தரவின்பேரில், நாகை மண்டல பொது மேலாளர் இளங்கோவன் அறிவுறுத்தலின்படி, திருத்துறைப்பூண்டி புனித தெரசாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச பஸ் பயண அட்டைகளை திருத்துறைப்பூண்டி அரசு போக்குவரத்து கிளை மேலாளர் ஜெய்சங்கர் வழங்கினார். இதில் தலைமை ஆசிரியை,மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
The post தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கும் விழா appeared first on Dinakaran.