புதுடெல்லி: டெல்லி பல்கலையின் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து துணை நிலை ஆளுநர் அலுவலகம் நோக்கி நேற்று பேரணி சென்றனர். அப்போது, டெல்லி அரசாங்கத்தின் உயர்கல்வி இயக்குநரகம் வழங்கிய ‘உதவி முறை’’(பேட்டர்ன ஆப் அசிஸ்டெண்ட்) என்கிற சந்தேகத்திற்குரிய ஒரு ஆவணத்தை திரும்பப்பெற வேண்டும். ஏனெனில், இந்த ஆவணம் மூலம் ”தேசிய கல்வி கொள்கையின் நிபந்தனைகளை அரசு திணிக்க முயற்சிக்கிறது. அதோடு, டெல்லி பல்கலையின் கீழ் செயல்படும் இந்த 12 கல்லூரிகளும் 100 சதவீதம் அரசின் நிதியுதவி பெற்று டெல்லி பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஆவணம் கூறுகிறது. இது தவறானது.
12 கல்லூரிகளை நிர்வகிக்க அரசு அதிகாரிகள் நியமனம்: கவர்னரிடம் ஆசிரியர்கள் சங்கம் மனு: நிதித்துறை உத்தரவை திரும்பபெற கோரிக்கை
