தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு அனைத்து உபகரணங்களையும் வழங்க அதிகாரி அறிவுறுத்தினார். தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பேசிய தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப் பிடித்தம் செய்யப்படுவது, இஎஸ்ஐ அட்டை வழங்குதல் போன்ற அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தூய்மை பணியாளருக்கு அனைத்து உபகரணங்களும் வழங்க வேண்டும் என்று ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, மாநகராட்சி ஆணையர்கள் சரவணகுமார் (தஞ்சாவூர்), லட்சுமணன் (கும்பகோணம்). ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் இலக்கியா, நகராட்சி ஆணையர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post தஞ்சாவூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்க அதிகாரி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.