தஞ்சாவூர், ஜூலை 18: தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரும் 21ம்தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21ம்தேதி (வெள்ளிகிழமை) காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, தஞ்சாவூர் கோட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஓரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறும்படி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) பழனிவேல் தெரிவித்துள்ளார்.
The post தஞ்சாவூரில் 21ம் தேதி விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் appeared first on Dinakaran.