தஞ்சாவூரில் புத்தகத்திருவிழா புத்தகங்களை வாங்க மாணவர்கள் ஆர்வம்

தஞ்சாவூர், ஜூலை 16: தஞ்சாவூரில் நேற்று இரண்டாவது நாள் புத்தகத் திருவிழாவில் ஏராளமான பள்ளி மாணவர்கள் வந்து பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச்சென்றனர். தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் புத்தகத் திருவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. தொடர் நாளான நேற்று காலை முதல் ஏராளமான பொதுமக்கள் மாணவ மாணவிகள் தங்களுக்கு பிடித்த புத்தகங்களை வாங்கிச் சென்றனர். விழாவின் இரண்டாம் நாளான நேற்று காலை இலக்கிய அரங்கம் நடைபெற்றது. இதில் நெறியாளர் மணிமாறன் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி பேராசிரியர் பாரி தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் கவிதா ஆகியோர் இலக்கியங்கள் குறித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து 11 மணியளவில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. மாலை 4 மணி அளவில் பள்ளி மாணவ மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பின்பு மாலை 6 மணி அளவில் காலமெல்லாம் கை கொடுக்கும் குரல் என்ற தலைப்பில் பட்டிமன்றம் பேச்சாளர் பாரதி பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் நாலும் படிங்க நாளும் படிங்க என்ற தலைப்பில் பேச்சாளர் சிவகுமார் பேசினார். இந்த புத்தக திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ. மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post தஞ்சாவூரில் புத்தகத்திருவிழா புத்தகங்களை வாங்க மாணவர்கள் ஆர்வம் appeared first on Dinakaran.

Related Stories: