தஞ்சாவூரில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் உண்ணாவிரத போராட்டம்

தஞ்சாவூர், ஜூலை 30: தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கத்தின் திருச்சி மண்டலம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கிளை தலைவர்கள் செந்தில்குமார், ராதா, யோகசந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். கிளை செயலாளர்கள் வைத்தியலிங்கம், கோபாலகிருஷ்ணன், ரெங்கராஜ் முன்னிலை வகித்தனர். தஞ்சை கிளை ராஜூ வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாநில செயலாளர் கோதண்டபாணி தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் மாநில அமைப்பு செயலாளர் அஜெய்ராஜ் விளக்க உரையாற்றினார்.

இந்த போராட்டத்தில், அனைத்து நிலை தொழில்நுட்ப காலிப்பணியிடங்கள் நிரப்பிட வேண்டும். 6 யூனிட்டிற்கு ஒரு பயிற்சி அலுவலர் என பணியிடங்களை உயர்த்த வேண்டும். எம்.எஸ்.டி.இ அறிவித்துள்ளபடி சான்றிதழ்தாரர்களுக்கு முதல்வர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி வலியுறுத்தப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, வணிகவரித் துறை பணியாளர் சங்க மாவட்ட தலைவர் முருகானந்தம், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மருத்துவதுறை ஆய்வக நுட்பனர் சங்கம் மாநில துணை தலைவர் சாந்தாராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ஜெயபால் நிறைவுரையாற்றினார். முடிவில் தஞ்சை கிளை தலைவர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

The post தஞ்சாவூரில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: