திருநங்கை தற்கொலை முயற்சி: 2 பேர் கைது

குன்றத்தூர்: போரூரை சேர்ந்தவர் ராஜ் (30) திருநங்கை. குன்றத்தூர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அதில், தன்னை குன்றத்தூர் கெளுத்திபேட்டையை சேர்ந்த திருநங்கைகள் கணபதி (எ) மகாலட்சுமி (34), வடிவேலு (எ) வடிவு (32) ஆகியோர், அவர்களது வீட்டுக்கு தன்னை அழைத்து சென்று ரூ.2 லட்சம் கேட்டு சரமாரியாக தாக்கினர். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். தற்போது வீடு திரும்பியதால், போலீசில் புகார் அளிக்கிறேன் என கூறப்பட்டு இருந்தது. இன்ஸ்பெக்டர் கண்ணன், எஸ்ஐ அந்தோணி சகாயபாரத் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் மகாலட்சுமி, வடிவு ஆகியோர் மீது  தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவர்களை, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: