டிரோன் மூலம் நானோ உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம்

 

ஈரோடு,நவ.7: டிரோன் மூலம் நானோ உரம் தெளிப்பு குறித்து கொங்கர்பாளையம் விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் குறித்தும்,வேலையாட்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் டிரோன்கள் மூலம் ஊட்டசத்துக்கள்,மருந்துகள் தெளிக்கும் முறையினை செயல்படுத்தி விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, ஈரோடு மாவட்டம் கொங்கர்பாளையத்தில் மக்காளசோள பயிரில் நானோ யூரியா, டிஏபி போன்ற உரங்களின் பயன்பாட்டு திறனை அறியும் பண்ணை திடல் பரிசோதனை விளக்க கூட்டம் மற்றும் செயல் விளக்க முகாம் நடைபெற்றது. இதில், நானோ உரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்,உர விரயம் தவிர்ப்பு, பயிர் வளர்ச்சியில் பல்வேறு ஊட்டசத்துக்களின் பங்கு குறித்து ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலையத்தின் உழவியல் விஞ்ஞானி சரவணகுமார் பங்கேற்று விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார்.

பெருகிவரும் வேலையாட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் டிரோன்களின் பங்கு குறித்து டி.என்.பாளையம் வேளாண் உதவி இயக்குநர் கார்த்திகேயன் பங்கேற்று விளக்கமளித்தார். கோரமண்டல் உர நிறுவனத்தின் உழவியல் அலுவலர் சோனைமுத்து பங்கேற்று நானோ டிஏபி உரத்தின் சிறப்புகள் விளக்கினார். இதைத்தொடர்ந்து மக்காச்சோள பயிரில் டிரோன்களின் மூலம் நானோ டிஏபி உரம் தெளிப்பு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில், கொங்கர்பாளையத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

The post டிரோன் மூலம் நானோ உரம் தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: