×

டிஜிபி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் காவல் துறைக்கு உயர் ஆற்றல் தொழில்நுட்பம்

லக்னோ: காவல் துறையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்கால தொழில்நுட்ப வசதிகளை உள்ளடக்கிய உயர் ஆற்றல் தொழில்நுட்பம் உருவாக்கப்பட வேண்டுமென டிஜிபிக்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் டிஜிபி.க்கள் மாநாடு கடந்த 19ம் தேதி தொடங்கியது. தமிழகத்தின் சார்பில் டிஜிபி சைலேந்திர பாபு பங்கேற்றார். மாநாட்டை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில், நக்சல்கள் பாதிப்பு, சிறை சீர்த்திருத்தங்கள், தீவிரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிதி உதவி, டிரோன் போன்ற தேசிய பாதுகாப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.கடந்த 2 நாட்களும் மாநாட்டில் முழுமையாக பங்கேற்ற பிரதமர் மோடி, நிறைவுநாளான நேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது: பொதுமக்களிடம் குறிப்பாக கொரோனாவுக்குப் பிறகு காவல்துறையின் அணுகுமுறையில் நேர்மறையான மாற்றம் ஏற்பட்டுள்ளதை பாராட்டுகிறேன். காவல் துறை தொடர்பான அனைத்து சம்பவங்களையும் பகுப்பாய்வு செய்து, அவற்றை வழக்கு ஆவணமாக உருவாக்க வேண்டும். பொதுமக்கள் வாழ்வில் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா தடுப்பூசிக்கான கோவின் ஆன்லைன் தளம், அரசாங்கத்தின் மின்னணு சந்தைக் களம் ஜிஇஎம், நிகழ்நேர பண பரிவர்த்தனைக்காக யுபிஐ போன்றவை பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளன.அதே போல, காவல் துறையின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், எதிர்கால தொழில்நுட்ப அம்சங்களும் உள்ளடக்கிய உயர் ஆற்றல் கொண்ட தொழில்நுட்பம் ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் தலைமையில் உருவாக்கப்பட வேண்டும். இது நாடு முழுவதும் உள்ள காவல் துறையினருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டும். டிரோன் தொழில்நுட்பத்தை மக்களின் நலனுக்காக காவல் துறை தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காவல்துறை எதிர்கொள்ளும் வழக்கமான சில சவால்களை சமாளிக்க, தொழில்நுட்ப தீர்வுகளைத் தேடுவதற்கு தகுதி வாய்ந்த இளைஞர்களை ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.* நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் திருச்சிமாநாட்டின் போது, நாட்டின் மூன்று சிறந்த காவல் நிலையங்களுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோப்பைகளை வழங்கினார். ஒன்றிய உள்துறை அமைச்சகம், இந்த ஆண்டிற்கான நாட்டின் சிறந்த முதல் 10 காவல் நிலையங்களை பட்டியலிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பிஎஸ் காவல் நிலையம் 8ம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. …

The post டிஜிபி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தல் காவல் துறைக்கு உயர் ஆற்றல் தொழில்நுட்பம் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,DGP ,Lucknow ,Dinakaran ,
× RELATED பீகாரில் நாளந்தா பல்கலை.யில் புதிய வளாகத்தை திறந்துவைத்தார் பிரதமர் மோடி