டாக்டர் ஆலோசனைப்படி சிகிச்சை; அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி

திருவாரூர், செப். 21: திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்தியல் துறை சார்பில், பொதுமக்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சிகிச்சை, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் பேரணி நடைபெற்றது.

நோய் பாதிப்பின் போது பொதுமக்கள் சுயமாக மருத்துவம் பார்த்துக் கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பெற்று பரிசோதனை மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும், மருந்து உட்கொள்ளும் போது ஒவ்வாமை, பக்க விளைவுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் போன்ற விழிப்புணர்வுகள் குறித்தும், 3வது தேசிய மருந்தக கண்காணிப்பு திட்ட வார விழாவையொட்டியும் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருந்தியல் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணியானது நேற்று நடைபெற்றது. இப்பேரணியை மருத்துவ கல்லூரி கண்காணிப்பாளர் டாக்டர் அன்சாரி முன்னிலையில் டீன் ஜோசப் ராஜ் துவக்கி வைத்தார். இதில் மருந்தியல் துறை மருத்துவர்கள் பிரித்சக்கரவர்த்தி, சபரி செல்வன், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

The post டாக்டர் ஆலோசனைப்படி சிகிச்சை; அரசு மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Related Stories: