ஜனாதிபதியுடன் அமைச்சர் கயல்விழி சந்திப்பு

 

தாராபுரம், ஆக.7: தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை ஆளுநர் மாளிகையில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவுக்கு மலர்கொத்து வழங்கி வரவேற்றேன். பின்னர் ஆளுநர் மாளிகையில் அழிந்து வரும் பழங்குடி இனத்தவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் பழங்குடியினர் வாழ்வாதாரம், தற்போதைய நிலை, வாழ்க்கைத் தரம் உயர்வுக்கு தமிழ்நாடு அரசு ஆற்றியுள்ள நலத்திட்ட பணிகள் குறித்தும் குடியரசு தலைவரிடம் பேசினேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

The post ஜனாதிபதியுடன் அமைச்சர் கயல்விழி சந்திப்பு appeared first on Dinakaran.

Related Stories: