சோழவந்தான், செப். 23: சோழவந்தான் அருகே காடுபட்டியில் ஆபத்தாக இடியும் நிலையில் உள்ள நிழற்குடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழவந்தான் அருகே காடுபட்டி கிராமத்தில் சுமார் 700 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூர் வழியாக மதுரை, சோழவந்தான், விக்கிரமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இவ்வூரில் உள்ள ஒரே ஒரு நிழற்குடையும் முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதன் மேற்கூரை சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து சென்ட்ரிங் கம்பிகள் வெளியில் கோரமாக காட்சியளிக்கிறது. மேலும் நிழற்குடையின் சுற்றுச்சுவர்களும் சிதிலமடைந்து இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் கிராம மக்கள் தினமும் அச்சத்தில் பரிதவித்து வருகின்றனர். எனவே வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், காடுபட்டி ஊராட்சி நிர்வாகத்தினர் ஆபத்தான நிலையில் உள்ள நிழற்குடையை அகற்றி புதிய நிழற்குடை அமைத்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post சோழவந்தான் காடுபட்டியில் ஆபத்தான நிழற்குடையை அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.