போச்சம்பள்ளி, பிப்.26: மத்தூர் பகுதியில் அமைந்துள்ள சோமேஸ்வரர் ஜோதிலிங்க கோயிலில் திருகல்யாண வைபவம் நடந்தது. விழாவில் சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்களால் கோயில் வளாகத்தில் கணபதி ஹோமம், ஹோம குண்ட வேள்வி, 108 தம்பதி பூஜை உள்ளிட்டவை நடந்தது. தொடர்ந்து சோமேஸ்வரர், அழகு திரிபுரசுந்தரி அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் என பெண் கேட்டும், சீர் வரிசைகள் கேட்டும், இரு தரப்பினரும் வெற்றிலை மாற்றி கொண்டு, இந்துகளின் சம்பிரதாயப்படி திருக்கல்யாணம் நடந்தது. நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஊர் மக்கள், ஊர் தலைவர், சிவனடியார்கள் செய்திருந்தனர்.
The post சோமேஸ்வரருக்கு திருக்கல்யாணம் appeared first on Dinakaran.