செயின் பறிப்பு, வழிப்பறி திருடர்களை கண்டறிய சிறப்பு வாகன தணிக்கை

திருச்சி, ஆக.24: திருச்சி மாநகரப் பகுதிகளில் செயின், செல்போன் பறிப்பு மற்றும் பணம் வழிபறி செய்வோரை கண்டறியும் வகையில் சிறப்பு வாகன தணிக்கை நடத்த மாநகர போலீசாருக்கு திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்றது முதல் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளை மேற்கொண்டு முக்கிய இடங்களில் வாகன தணிக்கை செய்தும், டூவீலர்களில் சென்று பெண்களிடம் செயின் மற்றும் செல்போன்களை பறிக்கும் திருடர்கள் மற்றும் பணம் வழிபறியில் ஈடுபடுவோர் ஆகியோரை கண்டறிந்து அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் மாநகர் முழுவதும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தீவிர வாகன தணிக்கை செய்து, செயின், செல்போன் பறிக்கும் திருடர்கள் மற்றும் பணம் வழிபறி சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டதின் போில் நேற்று மாநகரப்பகுதிகளில் 9 இடங்களில் சோதனை சாவடிகள் (செக் போஸ்ட்), சிறப்பு எஸ்ஐக்கள் தலைமையில் 14 ரோந்து வாகனங்கள், 3 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் மற்றும் மாநகரத்தின் பிரதான முக்கிய 41 சந்திப்புகளில் 20 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 150 போலீசார் தீவிர வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி வாகன தணிக்கையை காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

வாகன தணிக்கையின்போது அதிவேக (ஹைஸ்பீடு பைக்) டூவீலர்களில் செல்லும் இளைஞா்கள், சந்தேக நபா்கள் மற்றும் டூவீலரில் டிரிபில் ரைடு செய்து வரும் இளைஞா்கள் ஆகியோரை தடுத்து நிறுத்தி, வாகன பதிவு எண், காப்பீடு, வாகனங்களின் ஆவணங்களை சாிபார்த்தும், எப்ஆர்எஸ் (எப்ஆர்எஸ்) செயலி மூலமாக குற்றவாளிகளின் முக அடையாளங்களை சாிபார்த்தும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். மேலும் மாநகர நவீன போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியிலுள்ள போலீசாரும் இதேபோன்று டிரிபிள் ரைடு, ஹைஸ்பீடு வாகனங்கள் குறித்தும், சந்தேக நபர்களின் வாகன நடமாட்டம் குறித்தும் கட்டுப்பாட்டு அறையிலுள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் கண்காணித்து, அவர்கள் எந்த பகுதியில் செல்கிறார்களோ அந்தப்பகுதியில் வாகன தணிக்கை செய்யும் போலீசாருக்கு உடன் தகவல் தொிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

வாகன தணிக்கையின்போது பொதுமக்களிடம் ‘உங்களுடைய பாதுகாப்பிற்காகத்தான் வாகன தணிக்கை செய்கிறோம். அப்போது தான் குற்ற செயல்களில் ஈடுபடுவா்களை கண்டறிய முடியும்’ என்று கனிவுடன் விளக்கி கூறவேண்டும் என மாநகர கமிஷனர் காமினி அறிவுறுத்தியுள்ளார். திருச்சி மாநகாில் இனி வரும் காலங்களில் இதே போன்று தொடர் தீவிர வாகன தணிக்கை செய்து, குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி எச்சாிக்கை விடுத்துள்ளார்.

The post செயின் பறிப்பு, வழிப்பறி திருடர்களை கண்டறிய சிறப்பு வாகன தணிக்கை appeared first on Dinakaran.

Related Stories: