சென்னை : தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம். பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அசல் சான்றிதழ் இன்று விநியோகம்!
