சென்னை: சென்னை திருமுடிவாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. சென்னை குரோம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். இவருக்கு சொந்தமாக குன்றத்தூர் அருகே உள்ள திருமுடிவாக்கம் சிப்காட்டில் பிளாஸ்டிக் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. திருமுடிவாக்கம் சிப்காட், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் உள்ளிட்ட பகுதியில் கழிவாக வெளியேறும் பழைய பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து மறுசுயற்சி செய்ய இக்குடோன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆர்த்தி முருகன் என்ற பிளாஸ்டிக் குடோனில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இது தொடர்பாக குடோன் காவலாளி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு 2 வாகனங்களில் விரைந்த தாம்பரம், பூவிருந்தமல்லி தீயணைப்புத்துறையினர் 1 மணி நேரமாக தீயினை கட்டுப்படுத்தும் முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
