- நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி
- விஜய் கௌரவிதா
- சென்னை
- கோபி
- நிரஞ்சன்
- நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி
- நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி
- விஜய்
கோபி, ஜூன் 22: கோபி அருகே நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிரஞ்சன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி சட்டமன்ற தொகுதி அளவில் முதல் மதிப்பெண் பெற்றதை தொடர்ந்து நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் பாராட்டு சான்றிதழும் கல்வி ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாயும் வழங்கி பாராட்டப்பட்டது. இதனை நடிகர் விஜயிடம் இருந்து நேரில் பெற்று திரும்பிய மாணவர் நிரஞ்சனை குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கோபி சட்டமன்ற தொகுதியில் கோபி அருகே உள்ள நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் நிரஞ்சன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600 க்கு 595 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றார்.
இதைத்தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர் நிரஞ்சன், பள்ளி தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினத்துடன் சென்று, நடிகர் விஜயிடம் கல்வி ஊக்கத்தொகையாக 5 ஆயிரம் ரூபாயும், பாராட்டு சான்றிதழும் பெற்றார். இதைத்தொடர்ந்து கல்வி ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் பெற்று திரும்பிய மாணவர் நிரஞ்சனை பள்ளி தாளாளர் கே.ஏ.ஜனக ரத்தினம், இணை தாளாளர் சுகந்தி ஜனக ரத்தினம், செயலாளர் டாக்டர் அரவிந்தன், இணை செயலாளர் டாக்டர் மாலினி அரவிந்தன், முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
The post சென்னையில் நடிகர் விஜய் கவுரவித்த நம்பியூர் குமுதா மெட்ரிக் பள்ளி மாணவருக்கு பாராட்டு appeared first on Dinakaran.