பாபநாசம் கஞ்சிமேடு சாலையில் ஓடும் கழிவு நீரால் பாதிப்பு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பாபநாசம் : பாபநாசம் கஞ்சிமேடு சாலையின் நடுவே ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பாபநாசம் கஞ்சிமேடு காளியம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த தெருவில் சாலை நடுவில் சாக்கடை ஓடுவதால் பல்வேறு தொற்று வியாதிகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொசுக்கடியால் நிம்மதியான தூக்கம் இன்றி தவிப்பதாகவும் அப்பகுதியினர் புலம்புகின்றனர்.  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி மணிமாறன், கூறுகையில் சாலை நடுவே சாக்கடை செல்வதால் சுகாதார சீர் கேடு ஏற்படுகிறது. இதை சீரமைப்பதுடன், இங்குள்ள சுகாதார வளாகம் தண்ணீரின்றி பயன்பாடின்றி உள்ளது. இதையும் சீரமைக்க வேண்டும் என்றார்.

Related Stories: