×

செஞ்சேரிமலையில் நடுரோட்டில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம்

 

சூலூர், ஜூலை 13: கொப்பரை தேங்காயை கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுல்தான்பேட்டையில் உள்ள செஞ்சேரிமலை கோவில் முன்பு தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் ரோட்டில் தேங்காய் உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக விவசாயிகளிடத்தில் இருந்து தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்து அரசு விற்பனை செய்ய வேண்டும்.

கொப்பரை தேங்காயினை கிலோ ரூ.140க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தென்னை மரத்திற்கு காப்பீடு, உரம், மருந்து போன்றவைகளை முழு மானியத்தில் வழங்க வேண்டும். உரித்த தேங்காய் கிலோ ரூ.50க்கு கொள்முதல் செய்ய வேண்டும். தேங்காய் எண்ணெய்க்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சுல்தான்பேட்டை ஒன்றியம் செஞ்சேரி மலை திடலில் தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தினர் நடுரோட்டில் தேங்காய் உடைக்கும் போராட்டம் நடத்தினர். இதில், சங்கத்தின் கோவை மாவட்ட குழு உறுப்பினர் சபரீஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post செஞ்சேரிமலையில் நடுரோட்டில் தேங்காய் உடைத்து தென்னை விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Sencherimalai ,Sulur ,
× RELATED செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை...