×

காந்தி ஜெயந்தியையொட்டி மரக்கன்று நடும் விழா

 

கோவை, அக்.1: மகாத்மா காந்தியின் பிறந்த நாளையொட்டி தூய்மை பாரதம் இயக்கம் கடந்த 2014ம் ஆண்டு துவங்கியது. இதன் மூலம் நாட்டில் பொது இடங்களில் தூய்மையாக வைத்துக் கொள்வது, சுற்றுப்புற பராமரிப்பினை உறுதி செய்து வருகின்றது. அதன்படி நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனம் சார்பில் கோவை மாநகராட்சி, அனுப்பர்பாளையம், நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தூய்மை பணிகளை அந்நிறுவனத்தின் பணியாளர்கள் நேற்று மேற்கொண்டனர்.

மேலும், தூய்மைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீடு திட்ட நிறுவனத்தின் முதுநிலை மண்டல மேலாளர் பாலமுரளி மரக்கன்றுகளை நட்டு வைத்து, காப்பீட்டு நிறுவன முகவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில், நேஷனல் இன்சூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தின் முதுநிலை மேலாளர்கள் மஹாலட்சுமி, முத்துராஜ், ஷர்மிளா, சுதர்சன், உதவி மேலாளர் பிரீத்தா பிரவீன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

The post காந்தி ஜெயந்தியையொட்டி மரக்கன்று நடும் விழா appeared first on Dinakaran.

Tags : sapling ,Gandhi ,Jayanti ,Coimbatore ,Swachh Bharat movement ,Mahatma Gandhi ,National Insurance ,Dinakaran ,
× RELATED ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில்...