- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் மாவட்ட துடுப்பாட்டச் சங்கம்
- எல்கி உபகரணங்கள் டிராபி
- சிஐடி கல்லூரி
- காஸ்மோ வில்லேஜ் ஆர்பிஇ ஸ்போர்ட்ஸ்
- தின மலர்
கோவை, அக்.2: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பாக ‘எல்கி எக்யூப்மென்ட்ஸ் ட்ராபி’ என்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி கோவை சிஐடி கல்லூரியில் நடைபெற்றது. 50 ஓவர் கொண்ட இப்போட்டியில் காஸ்மோ வில்லேஜ் ஆர்பிஈ ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியுடன், சூர்யபாலா கிரிக்கெட் அகாடமி அணி மோதியது. இந்த போட்டியில் காஸ்மோ வில்லேஜ் அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 200 ரன்கள் எடுத்தது.
இந்த அணி சார்பாக விளையாடிய நவீன் 49 ரன்களும், ஆசிப் அஹமத் 30 ரன்களும் எடுத்தனர். சூர்யபாலா அணி சார்பாக பந்து வீசிய அராபத் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்களை எடுத்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய சூர்யபாலா கிரிக்கெட் அகாடமி அணி 46.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது தோல்வி அடைந்தது. இந்த அணி சார்பாக் விளையாடிய நதீர் 41 ரன்களை எடுத்தார். காஸ்மோ வில்லேஜ் அணி சார்பாக பந்து வீசிய செந்தில் குமார் 18 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
The post மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி appeared first on Dinakaran.