செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகள் மருத்துவ முகாம்: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு,அக்.2: மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைப்பெறும் என, கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: செங்கல்பட்டு மாவட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 2023- 2024ம் நிதியாண்டிற்கு 18 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான வட்டார அளவிலான மருத்துவ முகாம்கள் பள்ளிக்கல்வித்துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து மருத்துவ முகாம்கள் இம்மாதத்தில் காலை 10 மணி முதல் 1 மணிவரை நடத்தப்படவுள்ளன.

வரும் 9ம் தேதி திங்கட்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அச்சிறுப்பாக்கம், 10ம் தேதி செவ்வாய்கிழமை அன்று அரசு மேல்நிலைப்பள்ளி பொலம்பாக்கம், 11ம் தேதி புதன் கிழமை அன்று ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம் பவுஞ்சூர், 16ம் தேதி திங்கட்கிழமை அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மதுராந்தகம், 17ம் தேதி செவ்வாய்கிழமை அன்று புனித கொலம்பா மேல்நிலைப்பள்ளி செங்கல்பட்டில் நடக்கவுள்ளது.

மேலும், 18ம் தேதி புதன் அன்று அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி திருக்கழுக்குன்றம். 30ம் தேதி திங்கட்கிழமை அன்று அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, திருப்போரூர். 31ம் தேதி செவ்வாய்கிழமை அன்று அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளி சேலையூர் ஆகிய இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெறும். இதில் கலந்துகொள்ளும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவு செய்யப்படும். மேலும், இக்குழந்தைகளுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை, கல்வி உதவித்தொகை தகுதியான பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகள் மருத்துவ முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: