சுவிட்ச் போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து படுகாயம்

மாதவரம், நவ.17: ஓட்டேரி மங்களபுரம் கிருஷ்ணதாஸ் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (32). தனியார் நிறுவன கலெக்ஷன் ஏஜென்ட்டாக வேலை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது, தனது செல்போனுக்கு சார்ஜ் போட, வீட்டில் இருந்த மின்சார பெட்டியில் சுவிட்ச்சை இயக்கி உள்ளார். சமீபத்தில் 2 நாட்கள் பெய்த மழையில் சுவிட்ச் ஈரப்பதத்துடன் இருந்துள்ளது. அதனால் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடந்துள்ளார். வெளியே சென்றிருந்த அவரது மனைவி சினேகா வீடு திரும்பியபோது, கணவர் ரத்த காயத்துடன் மயக்க நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு, மயக்க நிலையில் பிரசாந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சுவிட்ச் போட்ட வாலிபர் மின்சாரம் பாய்ந்து படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: