×

சுற்றுலாத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் திறப்பு

 

அந்தியூர்,நவ.29: ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள பெரிய ஏரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் சுற்றுலாத்துறை சார்பில் புதிய படகு இல்லம் அமைக்கப்பட்டது.அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள படகை இல்லத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று கணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அந்தியூர் பெரிய ஏரியில் உள்ள படகு இல்லத்தில் குத்துவிளக்கேற்றி அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம், பேரூராட்சித் தலைவர் பாண்டியம்மாள்,பேரூர் கழகச் செயலாளர் காளிதாஸ் முன்னிலையில் குத்துவிளக்கு ஏற்றினார்.

பின்பு படகு இல்லத்தில் உள்ள மிதி படகில் பயணித்தார். இதில் பேரூராட்சி துணைத் தலைவர் பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர் மாதேஸ்வரன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு சோபியா சேக், செபஸ்தியான், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் அந்தியூர் பெஸ்ட் சக்திவேல், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் சரவணன், முன்னாள் எம்எல்ஏ குருசாமி மற்றும் மாவட்ட,நகர,ஊராட்சி, திமுக பொறுப்பாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சுற்றுலாத்துறை சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பில் அந்தியூர் பெரிய ஏரியில் படகு இல்லம் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Andhiur Periya Lake ,Andhiyur ,Periya Lake ,Andhiur, Erode district ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M. K. Stalin ,Tourism Department ,Anthiur ,
× RELATED பாரூர் பெரிய ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விட அரசு ஆணை