×

ஈரோடு நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

 

ஈரோடு, டிச.24: ஈரோடு நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை நீதிமன்ற வளாகம் அருகே கடந்த 20ம் தேதி அதே மாவட்டம் கீழநத்தம் மேலூர் பகுதியை சேர்ந்த மாயாண்டி (23) என்ற வாலிபரை முன் விரோதம் காரணமாக ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என்று தமிழக காவல் துறை தலைவர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் போலீஸ் பாதுகாப்பு நேற்று போடப்பட்டது. இதில், ஈரோடு சம்பத் நகரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் துப்பாக்கி ஏந்திய நிலையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post ஈரோடு நீதிமன்றத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு appeared first on Dinakaran.

Tags : Erode ,court ,Erode court ,Mayandi ,Keelanatham Melur ,Nellai court ,Dinakaran ,
× RELATED ஈரோட்டில் மது போதையில் ஓட்டி வரப்பட்ட...