ஈரோடு, டிச.25: தந்தை பெரியாரின் 51வது நினைவு நாளையொட்டி திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பெரியாரின் 51வது நினைவு நாளான நேற்று, காலை 9.30 மணியளவில் பன்னீர் செல்வம் பூங்கா பகுதியில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத்தினர் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, அமைப்புச் செயலாளர் சண்முகம் தலைமை வகித்தார்.
மாவட்டச் செயலாளர் மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சிற்றரசு, மாவட்ட துணைத்தலைவர் தேவராஜ், மாநகர தலைவர் தேவராஜ், செயலாளர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திராவிடர் கழகத்தினர் திரளானோர் பங்கேற்று தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
The post ராவிடர் கழகம் சார்பில் பெரியார் உருவ சிலைக்கு மரியாதை appeared first on Dinakaran.