சீர்காழி: சீர்காழியில் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தியாகி சாமிநாதர் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ ராம பக்த பால ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது விழாவையொட்டி யாகசாலையிலிருந்து கடம் புறப்பட்டு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க வான வேடிக்கையுடன் ஊர்வலமாக புறப்பட்டு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் பக்தர்கள் செய்திருந்தனர். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வேளாங்கண்ணி, நாகூர், திருநள்ளார், திருக்கடையூர், சிக்கல், காரைக்கால், எட்டுக்குடி, திருவாரூர், போன்ற பகுதிகளுக்கு இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய பகுதிகளில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய வந்து செல்கின்றனர்.
The post சீர்காழியில் ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.