சீருடை பணியாளர் தேர்வில் படைவீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு

சிவகங்கை, ஆக.28: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய பணியிடங்களுக்கு, முன்னாள் படைவீரர்களுக்கென 5சதவீத சிறப்பு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் இரண்டாம் நிலை காவலர்(ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக்காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. www.tnusrb.tn.gov.in என்ற இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இப்பணியிடங்களில் முன்னாள் படைவீரர்களுக்கு 5சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 1.7.2023 அன்று 47வயதிற்குள் உள்ள முன்னாள் படைவீரர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு 17.9.2023க்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டியது குறித்த முழு விவரங்களை மேற்காணும் இணையதள முகவரியில் அறியலாம். இந்த வாய்ப்பை சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள்பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post சீருடை பணியாளர் தேர்வில் படைவீரர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு appeared first on Dinakaran.

Related Stories: