சிவபத்மநாதன் முன்னிலையில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

பாவூர்சத்திரம், பிப்.19: பாவூர்சத்திரத்தில் மாற்றுக்கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாவூர்சத்திரம் பகுதியைச் சேர்ந்த மாற்று கட்சிக்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் சிவபத்மநாதன் முன்னிலையில் நடந்தது. இதில் பா.ஜ. இளைஞரணி தலைவர் அருண்பிரபு, நாம் தமிழர் கட்சி பாசறையின் பிரதிநிதி அமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது ஒன்றிய திமுக செயலாளர் சீனித்துரை, செல்வன், டால்டன், மாவட்ட உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற பொருளாளர் வைரசாமி, கபில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post சிவபத்மநாதன் முன்னிலையில் மாற்றுக்கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: