சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

காரைக்குடி, ஜூலை 8: ராகுல் காந்தி மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ததை கண்டித்து காரைக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் பாண்டிமெய்யப்பன் வரவேற்றார். எம்எல்ஏ மாங்குடி தலைமை வகித்து பேசுகையில், ‘அரசியல் காழ்புணர்ச்சியின் காரணமாக இளம் தலைவர் ராகுல்காந்தியை தகுதி நீக்கம் செய்தனர். ராகுல்காந்தி பிரதமாராக வந்து விடுவார் என பயந்து இதுபோன்று செய்துள்ளனர். சர்வாதிகார போக்கில் ஆளும் ஒன்றிய மோடி அரசு செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சிக்கு தான் வெற்றி முகம் பிரகாசமாக உள்ளதால் இதுபோன்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். ராகுல்காந்தியை கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார்.

இந்த சர்வாதிகார ஆட்சி நிலைக்காது. வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி மாற்றம் வரும்’ என்றார். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் கோவிலூர் அழகப்பன், நகர செயலாளர் குமரேசன், நகர்மன்ற உறுப்பினர் ரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சண்முகதாஸ், பள்ளத்தூர் பேரூராட்சி கவுன்சிலர் கொத்தரிகருப்பையா, பொதுக்குழு உறுப்பினர் மனோஜ், நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், பாலா, அருணா, மாஸ்மணி, அன்வர், கனி, சுரேஷ், மணச்சைகருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சிவகங்கையிலும் பஸ் நிலையம் முன்பு காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

The post சிவகங்கை, காரைக்குடியில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: