சில்லாம்பட்டி கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு: அமைச்சர் இயக்கி வைத்தார்

 

திருப்புத்தூர், அக்.20: திருப்புத்தூர் அருகே சில்லாம்பட்டி கிராமத்தில் புதிய மின் மாற்றியினை கூட்டுறவுதுறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இயக்கி வைத்தார். திருப்புத்தூர் அருகே நெடுமரம் ஊராட்சி சில்லாம்பட்டி கிராமத்தில் மின் திறன் குறைவாக இருந்ததால், சீரான முறையில் மின் விநியோகம் இல்லாமல் மின் சாதனப்பொருட்கள் அடிக்கடி சேதமடைந்து வந்தது. இதனால் இக்கிராமத்திற்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், அமைச்சரின் உத்தரவின் பேரில், திருப்புத்தூர் மின் பகிர்மானத்தின் சார்பில் புதிதாக நிறுவப்பட்டிருந்த மின் மாற்றியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வருவாய் கோட்டாட்சியர் பால்துரை, திருப்புத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், திமுக திருப்புத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் விராமதி மாணிக்கம், ஒன்றிய துணை செயலாளர் எம்.ஆர்.சி.இளங்கோ,

நெற்குப்பை பேரூராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன், சிங்கம்புணரி ஒன்றிய துணைச்செயலாளர் முத்துக்குமார், திருப்புத்தூர் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, நெடுமரம் ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கவாசகம் மற்றும் மின்வாரிய அலுவலர்கள், கிராமத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post சில்லாம்பட்டி கிராமத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு: அமைச்சர் இயக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: