சிறுதானிய விவசாயிகள் ஐதராபாத் பயணம்

கமுதி, ஜூலை 22: கமுதி வட்டார வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், கமுதி வட்டாரத்தைச் சேர்ந்த சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் 20 விவசாயிகள் வெளிமாநில பட்டறிவு பயணமாக ஐதராபாத்தில் உள்ள சிறுதானியங்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வட்டார தொழில் நுட்ப மேலாளர் ஈஸ்வரி, உதவி தொழில் நுட்ப மேலாளர் சுபாஷ் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து அழைத்துச் சென்றனர்.

5 நாள் பயணம் மேற்கொண்ட விவசாயிகள், ஆராய்ச்சி நிலையத்தில், சிறுதானியங்கள் சாகுபடி செய்ய வேண்டியதன் அவசியம், சிறுதானியங்களில் உள்ள முக்கியமான சத்துக்கள், சிறுதானியங்களை மதிப்பு கூட்டி தானியங்களாகவும், அதனை மாவாக அரைத்து அதன் மூலம் தயாரிக்கப்படும் பிஸ்கெட், லட்டு, பாஸ்தா, நூடுல்ஸ், குக்கீஸ் மற்றும் சிறுதானிய அவல் போன்றவை சத்துக்கள் நிறைந்து இருப்பது மட்டுமல்லாமல், நல்ல விலையில் விற்கப் படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும் என கூறப்பட்டது.

மேலும் சிறுதானியங்களை தரம் பிரித்தல், கல் நீக்குதல், தோல் நீக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்களை பற்றி விளக்கி கூறப்பட்டது. எண்ணெய் வித்துகள் ஆராய்ச்சி நிலையத்திற்கு சென்று, ஆமணக்கு, சூரியகாந்தி, எள் பயிர்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட ரகங்கள் மற்றும் சாகுபடி முறைகள், பூச்சி, நோய் தாக்குதலில் இருந்து கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி அறிந்து கொண்டனர்.

The post சிறுதானிய விவசாயிகள் ஐதராபாத் பயணம் appeared first on Dinakaran.

Related Stories: