சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம்

ஈரோடு, செப். 21: சிறுதானியங்களின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாகன பிரசாரம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் மூலம் “ஊட்டமிகு சிறுதானிங்கள்” என்ற பெயரில் சிறுதானியங்களின் பயன்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை பொதுமக்களிடம் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோட்டில் வாகன பிரசாரம் நேற்று மேற்கொள்ளப்பட்டது. இந்த வாகன பிரசார இயக்கம் ஈரோடு வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
மக்களிடம் மாறி வரும் நவீன உணவு பழக்கங்களால் பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுகின்றது. இதைத்தடுக்க சிறுதானியங்களை அதிகமாக எடுத்துக்கொள்வதன் அவசியம் குறித்து வேளாண்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. சிறுதானியங்களை எடுத்துக்கொள்வதால் பெருங்குடல் செயல்பாடு சீராகின்றது.
ரத்து அழுத்தத்தை சீராக்குகிறது. ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. சர்க்கரை நோய், புற்றுநோய் பாதிப்புகளை தடுக்கிறது. உடல் எடையானது சீராக வைக்கிறது. எலும்பு தேய்மானம், பித்தப்பை கற்கள் பாதிப்பு உள்ளிட்டவைகளை தடுக்கிறது.

இது போல பல்வேறு நன்மைகளை சிறுதானிங்கள் மூலம் நமக்கு கிடைக்கின்றது. இதை பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடம் குறைவாக உள்ளதால் பிரசார ஊர்திகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றோம். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு வட்டாரம் வாரியாக இது போன்ற விழிப்புணர்வு வாகன பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு வாகன பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: