கோவை, ஜூலை 28: கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (45). போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சிறப்பு எஸ்ஐ ஆக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கவிதா (40). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டாக கணவர், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வசிக்கின்றனர். சுரேஷ் தனது குடும்பத்தினரை கவனிக்காமல், குடும்ப செலவிற்கு பணம் தராமல் மன உளைச்சல் தரும் வகையில் நடப்பதாக கவிதா கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சிறப்பு எஸ்ஐ மீது மனைவி புகார் appeared first on Dinakaran.