வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. வெலிங்டன் பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச... நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்து ஆல் அவுட்டானது (114 ஓவர்). ஹென்றி நிக்கோல்ஸ் அதிகபட்சமாக 174 ரன் விளாசினார். வில் யங் 43, டேரில் மிட்செல் 42, நீல் வேக்னர் ஆட்டமிழக்காமல் 66 ரன் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல், ஜோசப் தலா 3 விக்கெட், சேஸ், அறிமுக வீரர் கெமார் ஹோல்டர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 2ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்திருந்தது. ஜெர்மைன் பிளாக்வுட் 69 ரன், கேம்ப்பெல், புரூக்ஸ் தலா 14 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். மூன்றாம் நாளான நேற்று அந்த அணி மேற்கொண்டு 7 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. கெமார் ஹோல்டர் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடுகிறது வெஸ்ட் இண்டீஸ்
