×

சிபிஎஸ்இ கல்விக்கு இணையாக தமிழக பாடத்திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

மணப்பாறை: தமிழகத்தில் தற்போது சிபிஎஸ்இ கல்வி பாடத்திட்டத்திற்கு இணையாக நம் பாடத்திட்டம் உள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கோவில்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள், கட்டிடங்கள், ஆய்வகம், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தொகுப்பூதிய ஆசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணப்படும். கடந்த காலங்களில் பாடத்திட்டத்தை பொறுத்த வரை 10, 12 ஆண்டுகளுக்கு ஒரே பாடத்திட்டம் என்ற அளவில் தான் இருந்துள்ளது. இப்போதும் கூட கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த பாடத்திட்டம் தான் இருந்து வருகிறது. ஆனால் தற்போது இன்றைய காலத்திற்கு ஏற்ப பாடதிட்டம் இருக்க வேண்டும். அதன்படி தான் தற்போது சிபிஎஸ்இ கல்வி பாடத்திட்டத்திற்கு இணையாக நம் பாடத்திட்டம் உள்ளது. இதே போல் ஆசியர்களுக்கு இன்னும் அதிகமாக பயிற்சி கொடுக்க வேண்டும். அது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம். வரும் காலங்களில் தமிழக பாடத்திட்டம் சிறப்பிற்குரிய வகையில் இருக்கும். இதே போல் மதிய உணவு திட்டத்தில் வாழைப்பழம் சேர்ப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இதே போல் தனியார் பள்ளி மீதான புகாரில் அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும். அச்சமின்றி புகார் அளிக்கலாம. இவ்வாறு அவர் கூறினார்….

The post சிபிஎஸ்இ கல்விக்கு இணையாக தமிழக பாடத்திட்டம்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CBSE ,Minister Anbil Mahesh Poiyamozhi ,Manaparai ,Minister ,Anbil Mahesh ,
× RELATED தமிழகத்தில் உள்ள அனைத்து...