×

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரூ.7,500 கோடியில் 16,000 வகுப்பறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா (திமுக) பேசுகையில், ‘ஓட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டடம் கட்ட அரசு முன்வருமா என்று கேள்வி கேட்டார். அதற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், ‘‘தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வட்டார கல்வி அலுவலக கட்டடம் கட்ட ஊரக வளர்ச்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. ரூ.7500 கோடியில் 16,000 புதிய வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டது. அதில் ரூ.2,487 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள், பள்ளி சுற்றுச்சுவர், ஆய்வகங்கள் உள்பட 3,603 வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 3,601 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாகவும், நடப்பாண்டு கூடுதலாக 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பள்ளி மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது’’ என்றார்.

The post தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ரூ.7,500 கோடியில் 16,000 வகுப்பறைகள்: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister Anbil Mahesh ,Tamil Nadu Legislative Assembly ,Ottapidaram ,MC Shanmugaiah ,DMK ,Minister ,Anbil Mahesh Poiyamozhi ,Tuticorin ,Minister Anbil Mahesh Poiyamozhi ,
× RELATED தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது..!!