×

தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று பட்டு வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார்.

* தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.24 கோடி 73 லட்சத்து 13 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

* 6500 ஏக்கரில் அதிக மகசூல் தரும் மல்பெரி ரகங்கள் நடவு செய்யும் விவசாயிகளுக்கு ரூ. 7 கூடிய 83 லட்சத்து 75 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

* பட்டுக் கூடுகளின் தரம் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்க 2350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.6 கோடி 80 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் நவீன பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்கள் வழங்கப்படும்.

* பட்டுப்புழு வளர்ப்பில் 2350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.50 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டுப்புழு வளர்ப்பு நோய் தடுப்பு மருந்து பொருட்கள் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

* 2350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 64 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பட்டு வளர்ப்பு குறித்து தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்படும்.

* 250 முன்னோடி பட்டு விவசாயிகளுக்கு ரூ.87 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பவர் ட்ல்லர் கொள்முதல் செய்து வழங்கப்படும்.

* மல்பெரி நாற்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உதவி அளித்திட நாற்பது ஏக்கர் பரப்பில் கிசான் மல்பெரி நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.

* பட்டு விவசாயிகளுக்கு தரமான இளம் பட்டுப்புழுக்கள் வளர்ப்பு செய்து விநியோகம் செய்திட ரூ.39 லட்சம் மதிப்பில் மூன்று பெரிய அளவிலான இளம் முழு வளர்ப்பு மையங்கள் அமைக்க மாநில அரசு நிதியாக ரூ.9 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்படும்.

* மாநிலத்தின் பட்டு நுறுப்பு பிரிவை மேம்படுத்தும் விதமாக கூடுதலாக பட்டு நோக்கு அலகுகள் ரூ.3 கோடியே 45 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பீட்டில் நிறுவிட மாநில அரசு நிதியாக ரூ.86 லட்சத்து 10 ஆயிரம் வழங்கப்
படும்.

* தர்மபுரி மாவட்டத்தில் நவீன அம்சங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பட்டுக்கூடு அங்காடி வளாகம் அமைக்கப்படும்.

* நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அணைக்கட்டி பாளையம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பட்டுக்கூடு அங்காடிவளாக ரூ.2 கோடி 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும்.

* மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகளுக்கு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

* மாநில அளவில் சிறந்த மூன்று விதைக்கோடு உற்பத்தியாளர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் ரொக்க பரிசுகள் வழங்கப்படும்.

The post தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Thamo Anparasan ,CHENNAI ,
× RELATED போக்குவரத்து நெரிசல் குறித்து ஆலோசனை...