சாலைக் கிராமத்தில் உரம் கூடுதல் விலைக்கு விற்றதால் கடைக்கு தடை

இளையான்குடி, அக்.4: இளையான்குடி அருகே சாலைக்கிராமம் பகுதியில் நடப்பாண்டில் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மொத்த டீலர் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்படும் உரங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மட்டுமே விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் அவ்வப்போது புகார் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் சாலை கிராமத்தைச் சேர்ந்த உரங்கள் விற்பனை டீலர் கிருஷ்ணன் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக, திருவள்ளூரைச் சேர்ந்த காளையப்பன், வேளாண் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் இளையான்குடி வட்டார உர ஆய்வாளர் அழகுராஜா, நேற்று கிருஷ்ணன் உரக் கடையில் ஆய்வு செய்தார். ஆய்வில் யூரியா மூட்டை ரூ. 266.50, டிஏபி ரூ.1350க்கு விற்பனை செய்ய வேண்டும்.

ஆனால் விவசாயிகளுக்கு யூரியா ரூ.330, டிஏபி ரூ.1400க்கு கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பனை செய்தது மற்றும் விற்பனை செய்த விவசாயிகளுக்கு ரொக்க பில்(ரசீது) வழங்காதது தெரியவந்தது. அதனால் உரக் கட்டுப்பாடு சட்டம் 1985 பிரிவு 3,5,35 ஆகியவற்றின் கீழ் மொத்தம் மற்றும் சில்லறை உரங்கள் விற்பனைக்கு தடை உத்தரவு வழங்கினார்.

The post சாலைக் கிராமத்தில் உரம் கூடுதல் விலைக்கு விற்றதால் கடைக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: