திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சின்னகந்திலி கிரமாம் கொட்டகொள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மாது (47), இவர் கடந்த 8 வருடமாக கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இவரது கோழி பண்ணையில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் என சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான கோழிகளை வளர்த்து வந்தார். இந்நிலையில் இவரது கோழி பண்ணையில் நேற்று மாலை 4 மணியளவில் திடீர் என கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாது தீயை அணைக்க முயற்சி செய்தார். திடீரென கோழி மற்றும் கோழிக்குஞ்சுகள் உள்ள பகுதியிலும் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது.
திருப்பத்தூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து: ரூ.10 லட்சம் மதிப்பு கோழிகள் உயிருடன் எரிந்து சாம்பல்
