மூளையும், நரம்பு மண்டலமும் நம்மை உணர்வோடு வாழ வைக்கின்றன. மற்ற செல்களை போல நரம்பு மண்டல செல்களும் ரத்தத்தில் இருந்து சக்திக்காக குளுக்கோஸ், கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றையும் எடுத்து பயன்படுத்துகிறது. ஆனால் மற்ற செல்கள் சக்தியை பயன்படுத்த இன்சுலினை நாடுகின்றன. ஆனால் நரம்பு செல்கள் இன்சுலின் இல்லாவிட்டாலும் சக்தியை எடுத்து பயன்படுத்தும் திறனுடையது. இதனாலேயே சர்க்கரை நோயாளியின் நரம்பு மண்டலம் பாதிக்கப்படுகிறது. நரம்பு செல்ககளுக்குள் அதிகளவு உள்ளே சென்ற சர்க்கரையை பயன்படுத்த இன்சுலின் தேவைப்படுகிறது. எனவே சர்க்கரை நோயாளிகளின் நரம்பு செல்களின் உள்ளே சென்ற சர்க்கரை அங்கேயே தங்கி அல்லது சார்பிடால் என்ற நொதியாக மாறி செல்களை பாதிக்க தொடங்குகிறது. இந்த செல்கள் கொஞ்சம், கொஞ்சமாக வீங்கி செயலிழந்து முடிவில் மடிந்து போகின்றன. உடனே இந்நோயாளிகளுக்கு நரம்பு சம்பந்தமான நோய் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கின்றன. கை, கால்களில் விரல்களில் வலி, ஊசி குத்துவது போன்ற உணர்வு, மதமதப்பு, உணர்ச்சியின்மை என ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் வலி சிறியளவில் இருக்கும். பின்பு கை, கால் முழுவதும் பரவும். தவிர சர்க்கரை நோயாளிகளின் நரம்புகளுக்கு போகும் ரத்தநாளங்கள் அடைபடும். இதனால் வாதம், கண் ஒருபக்கம் திருப்ப முடியாமல் இரட்டைப்பார்வை ஏற்படும். தொடையில் எரிச்சல், முகம்கோணி முகவாதம், கை, கால் விரல்களை நிமிர்த்த முடியாமல் போகலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் இது போன்ற பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
The post சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம் appeared first on Dinakaran.